ஜார்கண்ட்டில் நக்சல்கள் நடத்திய குண்டு வெடிப்பு - 3 CRPF வீரர்கள் காயம்...!

Jharkhand
By Nandhini Feb 02, 2023 10:19 AM GMT
Report

ஜார்கண்ட்டில் நக்சல்கள் நடத்திய குண்டு வெடிப்பில் 3 CRPF வீரர்கள் காயமடைந்துள்ளனர். 

நக்சல்கள் நடத்திய குண்டு வெடிப்பு

இன்று ஜார்கண்ட் மாநிலம், சாய்பாசா பகுதியில் நக்சல்கள் நடத்திய சிறிய ரக குண்டு வெடிப்பில் 3 CRPF வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக ராஞ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மாவோயிஸ்டுகளால் காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் ராகேஷ் பதக், பிடி அனல் மற்றும் பங்கஜ் யாதவ் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆதாரங்களின்படி, ஜார்கண்டின் மேற்கு சிங்பூமின் கோயில்கேரா ஸ்டேஷன் பகுதியில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

ied-blast-in-jharkhand-3-crpf-jawans-injured