யார் இல்லை என்றாலும் நாம்தமிழர் இலக்கை நோக்கி செல்லும்..!
கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், “ராஜீவ் காந்தி வழக்கில் வெற்றியை பெற்றது பேரறிவாளன் தான். அவரே சட்டங்களை படித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து இந்த வழக்கை முடித்து வென்றுள்ளார். மற்ற யாரும் இதற்கு காரணம் இல்லை.
மேலும், ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை செய்துள்ளார். ராகுல் காந்தி தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டேன் என்று தெரிவித்தார். ஆனால் அவர் யார் எங்களை மன்னிக்க? நாங்கள்தான் உங்களை மன்னித்தோம் என தெரிவித்தார்.
சீமானின் இந்த கருத்துக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்த கரூர் எம்பி ஜோதிமணி, “ சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என்றும் சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் அவர் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை.
சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர், தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன், தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது” என காட்டமாக பதிவிட்டிருந்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாக வெடித்து. இந்நிலையில் இது குறித்து ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் நெறியாளர் முதல்வன் தமிழ்ச்செல்வன் அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி பதிலளித்திருக்கிறார்.