87 வயது தாயை தோளில் சுமந்து நீலக்குறிஞ்சி மலரை பார்க்க வைத்த மகன்கள்...! - நெகிழ்ச்சி வீடியோ வைரல்...!

Viral Video Kerala
By Nandhini Oct 16, 2022 10:17 AM GMT
Report

87 வயது தாயை தோளில் சுமந்து நீலக்குறிஞ்சி மலரை பார்க்க வைத்த மகன்களின் நெகிழ்ச்சி வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி பூக்கள்

மூணாறு - குமளி மாநில நெடுஞ்சாலையில், கேரளாவின், இடுக்கி மாவட்டத்தின் சந்தன்பாறை கிராம பஞ்சாயத்துக்கு அருகில் உள்ள பொறியாளர் உயரம் (மெட்) எனப்படும் கள்ளிப்பாறை மலைப்பகுதியில் நீலக்குறிஞ்சி பரவலாக பூத்து குலுங்குகிறது.

12 வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் இந்த குறிஞ்சி பூவை பார்க்க அந்தப் பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனையடுத்து, வனத்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

2018ம் ஆண்டு, மூணாறில் நீலக்குறிஞ்சி பூத்தது. இதனையடுத்து, தற்போது, இந்த நீலநிற குறிஞ்சிப் பூக்கள் பூத்துகுலுங்கி கம்பீரமாக காட்சியளிக்கிறது. இங்கு வந்து பார்வையிடும் சுற்றுலா பயணிகள் பூக்களின் அழகில் மெய்மறந்து ரசித்து வருகின்றனர்.

idukki-kerala-neelakurinji-87-year-old-mother

தாயின் ஆசையை நிறைவேற்றிய மகன்கள்

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், குறிஞ்சி மலரை பார்க்க வேண்டும் என்ற பல ஆண்டுகளாக தாய் ஆசைப்பட்டுள்ளார். தாயின் ஆசையை நிறைவேற்ற நினைத்த மகன்கள், இடுக்கியில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலரை காண்ப்பிப்பதற்காக தனது 87 வயது தாயை தோளில் சுமந்து சென்று ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் நெகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.