காதலிக்க மறுத்த இளைஞரின் முகத்தில் ஆசிட் வீசிய 2 குழந்தைகளின் தாய்
கேரளாவில் பெண் ஒருவர் பேஸ்புக்கில் திருமணம் ஆகாதவர் என்று இளைஞரை ஏமாற்றி அவர் மீது ஆசிட் வீசியதில் இளைஞரின் கண் பார்வை பறிபோனது.
திருவனந்தபுரம் பூஜா பூரா பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்.இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பேஸ்புக்கில் அருண்குமாருக்கும் ஷீபாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
35 வயதான ஷீபா திருமணமாகதவர் என்று அருண்குமாரிடம் கூறியுள்ளார்.தொடர்ந்து,இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த இளைஞருக்கு உண்மை தெரிந்து விலகி செல்ல தொடங்கியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஷீபா அருண்குமாரிடம் பேச வேண்டும் என்று கூறி அவரை அடிமாலி பகுதிக்கு வர வழைத்துள்ளார். இதையடுத்து நண்பர்களுடன் சென்ற அருண்குமார் ஷீபாவிடன் பேசி கொண்டு இருந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே கோபத்தில் ஷீபா தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அருண்குமார் மீது வீசியுள்ளார்.இதனால் அருண்குமார் அலறி துடித்துள்ளார்.
அப்போது ஷீபா முகத்திலும் ஆசிட் பட்டதில் முகத்தில் காயம் ஏற்பட்டது.இதையடுத்து அருண்குமாரை அவரது நண்பர் மருத்துவமனையில்
சேர்த்தனர்.
அருண்குமாரை சோதித்த மருத்துவர்கள் அவரின் ஒரு கண் பார்வை பறி போனதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்வம் பற்றி அறிந்த போலீசார் ஷீபாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.