இங்கு கொரோனாவை விரட்டியதே இட்லியும் மஞ்சளும் தானாம் - ஆய்வில் தகவல்

COVID-19 India Idli
By Sumathi Apr 23, 2023 05:48 AM GMT
Report

கொரோனாவின் தாக்கம் குறைந்ததற்கு காரணம் உணவு பழக்கம் தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பழக்கம்

உலகம் முழுவதும் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 லட்சமாக உள்ளது. இருப்பினும் மக்கள் தொகை குறைவாக உள்ள மேற்கத்திய நாடுகளை விட, மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தியாவில் உயிரிழப்பு 5-8 மடங்கு குறைவாக உள்ளது.

இங்கு கொரோனாவை விரட்டியதே இட்லியும் மஞ்சளும் தானாம் - ஆய்வில் தகவல் | Idli Tea Turmeric Saved Indians Death Coronavirus

இது குறித்து, சுவிட்சர்லாந்து, பிரேசில், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக சேர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில், இந்தியர்களின் உணவு பழக்கமே காரணம் என்று தெரியவந்துள்ளது.

கொரோனா தாக்கம்

இந்திய டயட்டில் பெரும்பாலும் இரும்புசத்து, நார்சத்து போன்றவை அதிகமாக உள்ளது. மஞ்சள், தேநீர், மற்றும் இட்லி உணவு பழக்கத்தினால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் மஞ்சளில் உள்ள குர்குமினானது கொரோனா இறப்பு விகிதத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது.

மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிவப்பிறைச்சி, பால் பொருட்கள் , காபி மற்றும் ஆல்கஹால் போன்றவற்றின் அதீத பயன்பாடு மேற்கத்திய நாடுகளில் கொரோனாவின் தீவிரத்தை அதிகரித்தது.

ஸ்பிங்கோலிப்பிட்கள், பால்மிடிக் அமிலம் மற்றும் இந்த உணவுகளில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் LPS போன்றவை அதிகம் இருப்பதும், சைட்டோகைன் அதிகரிப்புக்கு காரணமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.