இனி வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவு - இட்லி, தோசை, பாயாசம்!
வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வந்தே பாரத்
வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவுகள் வழங்க, அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், "வந்தே பாரத் ரயில்களில், உள்ளூர் உணவுகள் வழங்க வேண்டும். உள்ளூர் உணவு வகைகளை அறிமுகப்படுத்துவது, பயணியரின் அனுபவத்தை மேம்படுத்தும். இதைத் தொடர்ந்து, படிப்படியாக அனைத்து ரயில்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உள்ளூர் உணவு
இந்நிலையில், மராட்டியத்தின் காந்தா போஹா, ஆந்திராவின் கோவைக்காய் காரைப்பொடி வறுவல், கேரளாவின் பாலாடை பாயாசம், பரோட்டா என அந்தந்த பகுதி ரயில்களில் மெனுக்கள் மாற்றம் செய்துள்ளது.
தமிழ்நாடு வழித்தடங்களில், இட்லி, வடை, சாம்பார், வெண் பொங்கல் மற்றும் தக்காளி சட்னி போன்ற உணவுகள் மெனுவில் இடம்பெற்றுள்ளன.
மதிய உணவாக சாதம், காய்கறி கறி, சாம்பார் தயிர் போன்றவையும், டிபன் வகையில் பரோட்டா, வெஜ் பொருட்கள், டீ மற்றும் காப்பி வழங்கப்படுகின்றன. இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.