2 ஆண்டுகளில் தங்கத்தை முந்த உள்ள உலோகம்? வெளியான கணிப்பு

India
By Karthikraja Feb 09, 2026 02:34 PM GMT
Report

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கிடைக்கும் பணத்தை அதில் முதலீடு செய்து வருகின்றனர்.

அதிகரிக்கும் காப்பர் தேவை

ஆனால் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதால், முதலீட்டாளர்கள் தங்கள் கவனத்தை தாமிரம் பக்கம் திருப்பியுள்ளனர். 

2 ஆண்டுகளில் தங்கத்தை முந்த உள்ள உலோகம்? வெளியான கணிப்பு | Icra Says India Copper Demand To Grow 12 Next 2Yrs

இந்தியாவில் தாமிரத்திற்கான(Copper) தேவை அடுத்த 2 ஆண்டுகளில் ஆண்டுக்கு 10-12 சதவீதமாக வளர்ச்சியடையும் என Investment Information and Credit Rating Agency கணித்துள்ளது.

மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், மின் கட்டமைப்புகள், தரவு மையங்கள் மற்றும் டிஜிட்டல் விரிவாக்கம் போன்ற பயன்பாடுகளால் தாமிரத் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில், 2026 ஜனவரியில் ஒரு டன் காப்பர் சுமார் 13,000 டாலர் வரை எட்டியுள்ளது. 

2 ஆண்டுகளில் தங்கத்தை முந்த உள்ள உலோகம்? வெளியான கணிப்பு | Icra Says India Copper Demand To Grow 12 Next 2Yrs

சுரங்கப் பணிகளில் இடையூறு, தாதுக்களின் தரம் குறைந்து வருதல் போன்ற காரணங்களால் தாமிர விலை சுமார் 40% அதிகரித்துள்ளது.

புதிய உற்பத்தி ஆலைகளின் திறன் விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் தாமிர பற்றாக்குறை விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.