கொரோனா 2ம் அலையில் அதிகமாக கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்!

corona 2wave pregnantwoman
By Irumporai Jun 16, 2021 05:45 PM GMT
Report

கொரோனா தொற்று முதல் அலையைக் காட்டிலும் 2வது அலையின் போது கர்ப்பிணி பெண்கள் மற்றும் பேறுகாலம் முடிந்த பெண்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


கொரோனா  முதல் அலையைக் காட்டிலும் 2வது அலையின்போது கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவதாக icmr  ஆய்வு கூறுகிறது.

மேலும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பேறுகாலம் முடிந்த பெண்களினிடையே கொரோனா தொற்றால் ஏற்பட்ட இறப்பு விகிதம், முதல் அலையில் 0.7 சதவீதம். ஆனால் தற்போது இரண்டாவது அலையின்போது, அது 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது." என்று அந்த ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றை தவிர்க்க கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையமும் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.