30 நிமிசம் தான்; எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் - ஊரே மயானமாகும் பயங்கரம்!

Iceland
By Sumathi Dec 02, 2023 06:49 AM GMT
Report

உலகில் பல மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

கிரண்டாவிக்

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் அமைந்துள்ள நகரம் கிரண்டாவிக். இங்கு மொத்தமாகவே 3 ஆயிரம் தான் வசிக்கின்றனர். இங்கு கடந்த வாரம் ஒரு மிகப்பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டது.

iceland volcano

அதன்பின், தொடர்ச்சியாக மினி பூகம்பங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்படி சுமார் 1000க்கும் மேற்பட்ட பூகம்பங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பூகம்பங்கள் அதிகம் ஏற்படும் இந்திய நகரங்கள் : ஆபத்து நிலையில் தமிழகம் ?

பூகம்பங்கள் அதிகம் ஏற்படும் இந்திய நகரங்கள் : ஆபத்து நிலையில் தமிழகம் ?

எரிமலை வெடிப்பு

இந்நிலையில், அங்கு நிலத்திற்கு அடியில் மாக்மா (magma) எனப்படும் நெருப்பு குழம்பு குவிந்து வருவதையும், பூமியின் மேற்பரப்பில் இருந்து 1 கிலோமீட்டருக்குள் இருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ice land

இதனால் பாதுகாப்பு கருதி கிரண்டாவிக் வடக்கே நான்கு கிமீ தொலைவில் அமைந்துள்ள ஸ்வார்ட்செங்கி மின்நிலையத்தைச் சுற்றித் தற்காப்புச் சுவர்களைக் கட்டும் பணியை ஐஸ்லாந்து அரசு தொடங்கியுள்ளது.

மேலும், எப்போது வேண்டுமானாலும் எரிமலை வெடிப்பு ஏற்படும். நெருப்பு குழம்பு மிக அருகில் இருப்பதால், எரிமலை வெடிப்பு ஏற்படும் போது நமக்கு 30 நிமிடம் கூட இருக்காது எனத் தெரிவித்துள்ளனர்.