உலகக் கோப்பை 2023: INDvsNZ - ஹாட் ஸ்டார் படைத்த புதிய சாதனை!
இந்திய அணி அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து அணியுடன் விளையாடி வருகிறது.
INDvsNZ
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. முதலில் களமிறங்கிய ரோகித் மற்றும் கில் அதிரடியை காட்டினர். ரோகித் 4 பவுண்டரி 4 சிக்சருடன் அதிரடியாக விளையாடி 47 (29) ரன்களில் அவுட் ஆனார்.
அவரைத்தொடர்ந்து விராட் கோலி அதிரடி காட்ட சுப்மன் கில் 79* (65) ரன்னின் போது, அதிகப்படியான வெப்பத்தால் பாதியிலேயே பெவிலியன் திரும்பினார். இவரைத்தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்து அணியின் பவுலர்களை பொளந்து கட்டினார். மறுமுனையில் விராட் கோலி 117 ரன்கள் அடித்து, சச்சினின் சாதனையை முறியடித்து, ஒரு நாள் போட்டியில் 50 சதங்களை பூர்த்தி செய்து அவுட் ஆனார்.
ஹாட் ஸ்டார் சாதனை
தொடர்ந்து ஸ்ரேயாஸ் 4 பவுண்டரி 8 சிக்சருடன் சதமடித்து 105 ரன்களை குவித்தார். கே. எல் ராகுல் 39 ரன்களுடன் களத்தில் இருந்தார். 50 வது ஓவர் முடிவில் இந்திய அணி 397/4 ரன்கள் எடுத்து அசத்தியது. தொடர்ந்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், அணியின் நம்பிக்கையாக மிட்செல் 100 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார்.
இந்நிலையில், பல சாதனைகளை படைத்து வரும் இப்போட்டியில், ஹாட் ஸ்டார் ஓடிடி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. அதாவது டிஜிட்டல் உலகில் ஒரே நேரத்தில் அதிக பேரால் பார்க்கப்பட்ட இன்றைய போட்டி அமைந்துள்ளது.
கிட்டத்தட்ட 5 கோடி பேர் இப்போட்டியை கண்டு களித்து வந்துள்ளனர். மேலும், ஹாட் ஸ்டார் மொபைல் சந்தாதாரர்களுக்கு உலகக் கோப்பை போட்டியை இலவசமாக பார்க்க ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.