புள்ளிபட்டியலில் அசால்ட்டாக முன்னேறி ஆஸ்திரேலியா - பாவம் இங்கிலாந்து
ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே அதிமுக்கியத்துவம் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில் 2வது போட்டியிலும் 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்தநிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து 7வது இடத்தில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது.