ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 - தேதிகள் வெளியீடு - அதிகாரப்பூர்வ தகவல்...!

Cricket International Cricket Council
By Nandhini Feb 08, 2023 12:07 PM GMT
Report

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 இறுதிப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இப்போட்டி நாளை முதல் மார்ச் 13ம் தேதி வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் அதை 3-0 அல்லது 2-0 என வென்றால் தான் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும். எனவே, இந்திய அணிக்கு இத்தொடர் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

icc-world-test-ch-ship-2023-final-from-june-7

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023

இந்த ஆண்டு இறுதியில் ஓவலில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 இறுதிப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2021ம் ஆண்டு சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரைக் கைப்பற்றியது.

தற்போது 9 அணிகள் கொண்ட புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா 75.56 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது.

இந்தியா 58.93 புள்ளிகளை கொண்டுள்ளது. இலங்கை (53.33%) மற்றும் தென்னாபிரிக்கா (48.72%) முறையே 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பும் உள்ளது.

நியூசிலாந்திற்கு எதிராக இலங்கைக்கு 2 வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவின் கடைசி பணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட சொந்தத் தொடராகும்.

நாளை நாக்பூரில் தொடங்கும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோத உள்ளன. இந்தப் போட்டியின் முடிவில் இறுதிப் போட்டியாளர்களைத் தீர்மானிப்பதில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

இந்நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023ம் ஆண்டு இறுதிப் போட்டியை வரும் ஜூன் 7ம் தேதி நடைபெற உள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2வது பதிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள ஓவலில் ஜூன் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை ரிசர்வ் நாளுடன் (ஜூன் 12) நடைபெற உள்ளது.