பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஐசிசி

Indian Cricket Team Pakistan national cricket team International Cricket Council
By Sivaraj Feb 02, 2026 07:28 AM GMT
Report

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக கூறிய பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் அணி

இந்தியா, இலங்கையால் நடத்தப்படும் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. 

Pakistan Cricket Team

ஆனால், பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடாது என்றும் தெரிவித்தது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

India/Pakistan

குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும்

இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பது உலகளாவிய நிகழ்வுகளின் உணர்வு மற்றும் புனிதத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என ஐசிசி கூறியுள்ளது.

மேலும், "அனைத்து தகுதி பெற்ற அணிகளும் போட்டி அட்டவணையின்படி, சமமான அடிப்படையில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் அடிப்படைக் கொள்கையுடன், இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பு நிலைப்பாட்டை ஒத்துப் பார்ப்பது கடினம்" எனவும் தெரிவித்துள்ளது. 

Jay shah / ICC

Pakistan Cricket Team