ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் புதிய சாதனைப் படைத்த ரிஷப் பண்ட

icc test cricket palyers ranking
By Praveen May 06, 2021 10:57 PM GMT
Report

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் ரி‌ஷப்பண்ட் 747 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார். ஐ.சி.சி.டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

ரி‌ஷப்பண்ட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் மிகவும் இக்கட்டான நிலையில் அபாரமாக விளையாடி அணியை காப்பாற்றினார். இதன் மூலம் இளம் விக்கெட் கீப்பரான ரி‌ஷப்பண்ட் மிடில் ஆர்டரில் தவிர்க்கமுடியாத வீரராக உருவெடுத்துள்ளார்.

இந்த அணி கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மாவும் 747 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஸ்டீவ் சுமித், மார்னஸ் லபுசேன் (ஆஸ்தி ரேலியா) முறையே 2-வது, 3-வது இடங்களில் உள்ளனர்.