டாப்-10 பந்து வீச்சாளர்களில் இடம்பெற்ற 2 இந்திய வீரர்கள் - டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் வெளியீடு

icc testbowlersranklist
By Petchi Avudaiappan Jan 06, 2022 12:02 AM GMT
Report

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட்டின் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த தரவரிசை பட்டியலில், இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடம் பிடித்து அசத்தி உள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. 

அதேசமயம் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸூம், 3வது இடத்தில் பாகிஸ்தானின் ஷாகீன் அஃப்ரீடியும், 4வது இடத்தில் நியூசிலாந்தின் டிம் சவுத்தியும், 5வது இடத்தில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன், 6வது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் ரபாடாவும் இடம் பெற்றுள்ளனர். 

ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹாசில்வுட் ஒரு இடம் சறுக்கி 7வது இடத்திலும், 8வது இடத்தில் நெயில் வாக்னரும் இடம் பெற்றுள்ளனர். மிட்செல் ஸ்டார்க் ஒரு இடம் சறுக்கி 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.