ஐசிசி டி20 தரவரிசை.., முதலிரண்டு இடங்களில் இந்திய வீரர்கள் ஆதிக்கம்
ஆடவருக்கான ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.
முதலிரண்டு இடங்களில் இந்திய வீரர்கள்
இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
கடைசி டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா, ஐசிசி டி20 தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மேலும், இஷான் கிஷன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். தரவரிசையின் முதல் 10 இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஜாஸ் பட்லர், திலக் வர்மாவை பின்னுக்குத் தள்ளி ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர் சஞ்சு சாம்சன் நான்கு இடங்கள் முன்னேறி 30ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை
1. இஷான் கிஷன் - 913 புள்ளிகள்
2. அபிஷேக் சர்மா - 862 புள்ளிகள்
3. சஹிஜதா ஃபர்ஹான் - 848 புள்ளிகள்
4. பில் சால்ட் - 799 புள்ளிகள்
5. டெவால்ட் பிரெவிஸ் - 789 புள்ளிகள்