திடீரென இலங்கை அணியை சஸ்பெண்ட் செய்த ICC!! இப்படி ஒரு காரணமா..?

Sri Lanka Cricket International Cricket Council
By Karthick Nov 11, 2023 04:32 AM GMT
Report

இலங்கை அணியை சஸ்பெண்ட் செய்து ICC அதிரடி காட்டியுள்ளது.

இலங்கை அணி சஸ்பெண்ட்

உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி கடும் தோல்வியை சந்தித்துள்ளது. 9 போட்டிகளை ஆடியுள்ள இலங்கை அணி அதில் வெறும் 2-இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ள அந்த அணி பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

திடீரென இலங்கை அணியை சஸ்பெண்ட் செய்த ICC!! இப்படி ஒரு காரணமா..? | Icc Suspends Srilnakan Cricket Board

அதே போல் வங்காளதேச அணிக்கு எதிராக இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஏஞ்சலோ மேத்யூஸ் சர்ச்சையான முறையில் அவுட்டானதும் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தான் கடும் தோல்விக்கு எதிரொலியாக அந்த அணியின் வாரியம் அண்மையில் கலைக்கப்பட்டது. அதுவே ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியை அந்த அணிக்கு ICC கொடுத்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இலங்கை கிரிக்கெட் (SLC) நிர்வாகத்தில் அரசாங்கத்தின் விரிவான தலையீடு காரணமாக, ஐசிசி இடைநீக்கம் செய்துள்ளது. இது உடனடியாக அமுலுக்கு வருகிறது. ஐசிசி வாரியம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், ஐசிசி உறுப்பினராக இருந்து வரும் இலங்கை அதன் கடமைகள், விவகாரங்களை தன்னாட்சி முறையில் நிர்வகிக்க வேண்டும்.

அதன் நிர்வாகம், ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.இலங்கையில் கிரிக்கெட் வாரியம் இடைநீக்கத்தின் நிபந்தனைகள் ஐசிசி வாரியத்தால் சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.