முதல் இடம் பிடித்த இந்தியா - குவியும் பாராட்டுகள்

India FirstPlace ICCRanking IndVsWi
By Thahir Feb 21, 2022 01:51 AM GMT
Report

ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தொடருக்கான தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது.

முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 65 ரன்கள் எடுத்தார்.

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

முதல் இடம் பிடித்த இந்தியா - குவியும் பாராட்டுகள் | Icc Ranking India First Place

மேலும், 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில், ஐ.சி.சி வெளியிட்டுள்ள டி20 அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

6 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. ஏற்கனவே 2016 பிப்ரவரி 12 முதல் மே 3 வரை எம்.எஸ்.டோனி தலைமையில் இந்தியா முதல் இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

You May Like This