ஐசிசி வெளியிட்ட வேகப்பந்து வீச்சாளர் தரவரிசை - நம்பர் 1 இடத்தை பிடித்து முகமது சிராஜ் சாதனை...!

Indian Cricket Team International Cricket Council Mohammed Siraj
By Nandhini Jan 25, 2023 10:30 AM GMT
Report

ஐசிசி வெளியிட்ட வேகப்பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதலிடம் பிடித்து சாதனைப்படைத்துள்ளார்.

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியாவிற்கு வருகை தந்த நியூசிலாந்து அணி 3-வது மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடியது.

இந்நிலையில், நேற்று இந்தூரில் நடைபெற்ற கடைசி 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித்தும், சுப்மன் கில்லும் களத்தில் இறங்கினர்.

முதல் பந்திலிருந்தே இருவரும் அதிரடியாக விளையாடினர். நியூசிலாந்தின் பந்து வீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்க விட்டு தெறிக்க விட்டனர். இதனால் அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது.

இப்போட்டியில், 20 ஓவர்களில் இந்தியா 165 ரன்களை எடுத்தது. கேப்டன் ரோகித் முதலாவதாக சதம் அடித்து அசத்தினார். பின்பு, சுப்மன் கில்லும் சதம் அடித்து மாஸ் காட்டினார். ரோகித் சர்மாவிற்கு இது 30வது சதமாகும். தற்போது இந்தியா 26 ஓவரில் 212 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணி 50 ஓவரில் 385 ரன்களை குவித்து, நியூசிலாந்தை 295 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 90 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

icc-odi-mohammed-siraj-top-bowler-rankings

நம்பர் 1 இடத்தை பிடித்து முகமது சிராஜ் 

இந்நிலையில், ஐசிசி வேகப்பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், நடைபெற்ற 2 தொடர்களிலும் தன் சிறப்பான பங்களிப்பை கொடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஐசிசி ஒரு நாள் தொடர் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இதற்கு முன், ஆஸ்திரேலியா அணி வீரர் ஜோஸ் ஹசல்வுட் நம்பர் 1 இடத்தில் இருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி முகமது சிராஜ் 729 ரேட்டிங் பெற்று நம்பர் 1 இடம் பிடித்திருக்கிறார்.