ஐசிசி விருது - சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு..!

Shubman Gill International Cricket Council
By Nandhini Feb 14, 2023 10:21 AM GMT
Report

ஐசிசி வெளியிட்ட பட்டியலில் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சாதனைப் படைத்த சுப்மன் கில்

நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது. சமீபத்தில் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நியூசிலாந்தி-இந்தியா அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இப்போட்டியின் முடிவில் நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் வெறும் 66 ரன்னில் சுருண்டு விழுந்தது. இதனால், இந்தியா அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. நியூசிலாந்தக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார்.

இதனால், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்கிற 3 பார்மெட் கிரிக்கெட் போட்டியிலும் சதம் விளாசிய 5வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

இதேபோல சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த 7வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, கே.எல்.ராகுல், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோருடன் அவர் இப்பட்டியலில் இணைந்துள்ளார்.

icc-men-player-month-award-january-2023-gill

சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு

இந்நிலையில், ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றுள்ளார். சுப்மன் கில்லுக்கு கடந்த மாதம் மிகச் சிறப்பாக விளையாடினார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதமும், டி20 தொடரில் சதமும் அடித்து அசத்தினார்.

கடந்த மாதம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்தார்.

கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலுக்கான 3 வீரர்களில் 2 இந்திய வீரர்கள் தேர்வாகினார்கள். அதில், சிறந்த வீரர் விருதுக்கு நியூசிலாந்தின் டேவான் கான்வே, இந்தியாவின் சுப்மன் கில், முகமது சிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.