விலக நினைத்தால் கடுமையான தடை! பாகிஸ்தானுக்கு ஐசிசியின் எச்சரிக்கை
பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகி முற்பட்டால், ஐசிசி அதன் மீது கடுமையான தடைகளை விதிக்கும் என்ற தகவல் கசிந்துள்ளது.
வங்காளதேச அணிக்கு ஆதரவு தெரிவித்து பாகிஸ்தான் அணியும் டி20 உலகக்கோப்பையை புறக்கணிப்பதாக கூறப்பட்டது.
Representational Image/X
இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை கிளப்ப, வங்காளதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணியை ஐசிசி சேர்த்தது.
இந்த சூழலில் பாகிஸ்தான் விலகும் முடிவை எடுத்தால், அந்த அணிக்கு ஐசிசி கடுமையான தடைகளை விதிக்கும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்படி ஐசிசி நடவடிக்கை எடுத்தால் பாகிஸ்தான் அணிக்கு நிதி தொடர்பாக பெரிய இழப்பு ஏற்படும்.
அத்துடன் ஆசியக் கிண்ணத்தில் இருந்து பாகிஸ்தான் அணி விலக்கப்படலாம். பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட அனைத்து இருதரப்பு தொடர்களும் நிறுத்தி வைக்கப்படலாம்.
AP