இனி என்ன செய்யும் பாகிஸ்தான் அணி? சாம்பியன்ஸ் டிராபி இந்த நாட்டுக்கு மாற்றம்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரை முழுவதுமாக மாற்ற ஐசிசி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மாதம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏனெனில், பாகிஸ்தானுக்கு வந்து சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட இந்தியா மறுத்துவிட்டது.
மேலும் தாங்கள் விளையாடும் போட்டிகளை வெளிநாட்டில் நடத்துமாறு பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் இந்த கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது.
ஐசிசி முடிவு?
இதனையடுத்து இந்தியா விளையாடும் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த ஒப்புக்கொள்ளவில்லை என்றால் பாகிஸ்தானில் இருந்து ஒட்டுமொத்த தொடரையும் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றி விடுவோம் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதில் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கும் முன்னர் அவர்களின் அரசுடன் கலந்தாலோசித்து வருகின்றனர். இந்தியாவின் பிடிவாதத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,
அவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமின்றி இனி எந்த ஐசிசி தொடர்களிலும் இந்தியா உடன் மோத மாட்டோம் என்ற நிலைப்பாட்டையும் எடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.