விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா - புதிய தரவரிசை பட்டியலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளூம் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று துவங்க உள்ளது. இந்தநிலையில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், இந்திய அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் மாஸ் காட்டி வரும் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய அணியுடனான நடப்பு தொடர் துவங்குவதற்கு முன்பாக ஐந்தாவது இடத்தில் இருந்த ஜோ ரூட், இந்த தொடரில் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தி வருவதன் மூலம் கேன் வில்லியம்சனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். கேன் வில்லியம்சன் இரண்டாவது இடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையின் நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் லபுசேன் உள்ளார். முன்னதாக ஐந்தாவது இடத்தில் இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வருவதால் 6வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் இல்லை. பேட் கம்மின்ஸே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய அணிக்கு எதிரான நடப்பு தொடரில் பந்துவீச்சில் மிரட்டி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதனால் ஆஸ்திரேலிய அணியின் நீல் வாக்னர் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அஸ்வின் இரண்டாவது இடத்திலும், டிம் சவுத்தி மூன்றாவது இடத்தில், ஜேஸ் ஹசில்வுட் 4வது இடத்திலும் உள்ளனர். அஸ்வினை தவிர வேறு இந்திய வீரர்கள் யாரும் முதல் 10 இடங்களுக்குள் இல்லை.
Other changes in the @MRFWorldwide ICC Men’s Test Player Rankings for the week:
— ICC (@ICC) September 1, 2021
? Rohit Sharma overtakes Virat Kohli
? James Anderson enters top five
Details ? https://t.co/woGyneJVGk pic.twitter.com/9mFl314BS8
தீபச்செல்வனின் தடுத்து வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை விடுவிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் உத்தரவு IBC Tamil
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
ஈரானில் கொடூரம்: சிறையிலிருந்த காதலியுடன் திருமணம் முடித்து அடுத்த நொடியே மணமகனுக்கு மரணதண்டனை IBC Tamil