ஐ.சி.சி. டெஸ்ட் புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு - ரசிகர்கள் அதிர்ச்சி

ICC shocked Virat Kohli sports-cricket List Release
By Nandhini Jan 06, 2022 07:04 AM GMT
Report

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

இந்த தர வரிசை பட்டியலில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதம் விளாசிய இந்திய வீரர் லோகேஷ் ராகுல் பேட்டிங் தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்திருக்கிறார்.

கேப்டன் விராட் கோலி 2 இடம் சரிந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பியே ஆடிக்கொண்டு வருகிறார். அவர் கடைசி 2 ஆண்டுகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.