இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி !!
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தாமதமாக பந்துவீசியதாக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தநிலையில், இந்த போட்டியில் தாமதமாக பந்துவீசியதாக இந்திய அணிக்கு ஐசிசி., அபராதம் விதித்துள்ளது.
கொடுக்கப்பட்ட நேரத்தை விட இந்திய பந்துவீச்சாளர்கள் கூடுதல் நேரம் எடுத்து கொண்டதால் ஐசிசி., இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கொடுக்கப்பட்ட நேரத்தை விட இந்திய பந்துவீச்சாளர்கள் கூடுதல் நேரம் எடுத்து கொண்டதால் ஐசிசி., இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.