2028 டி20 உலகக்கோப்பைக்கான 12 அணிகள்: உறுதிப்படுத்திய ஐசிசி

Indian Cricket Team New Zealand Cricket Team Australia Cricket Team International Cricket Council
By Sivaraj Feb 20, 2026 10:38 AM GMT
Report

12 அணிகள் 2028ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு நேரடித் தகுதியைப் பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது. 

2028ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடந்து டி20 உலகக்கோப்பை தொடர் 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. 

Australia vs Sri Lanka, T20 World Cup 2026

இத்தொடரில் மொத்தம் 20 நாடுகளின் அணிகள் பங்கேற்க உள்ளன. அவற்றில் நேரடியாக விளையாட தகுதி பெற்றுள்ள 12 அணிகளை ஐசிசி தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

நேரடி தகுதி இடங்கள் மூன்று முதன்மை வழிகளில் தீர்மானிக்கப்பட்டன. அதன்படி, போட்டியை நடத்தும் நாடுகளான அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேரடி தகுதி பெற்றுள்ளன.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அனைத்து அணிகளும், 2028 உலகக்கோப்பைக்கு தானாகவே நுழையும் தகுதியைப் பெற்றுள்ளன. 

West Indies Cricket Team

மீதமுள்ள நேரடி இடங்கள், ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் ஏற்கனவே தகுதி பெறாத மிக உயர்ந்த தரவரிசையில் உள்ள அணிகளுக்கு வழங்கப்பட்டன. 

தகுதி பெற்ற அணிகள் 

  • சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றதால், 2028 டி20 உலககோப்பைக்கு நேரடி தகுதியைப் பெற்ற அணிகள்: இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே, நியூசிலாந்து
  • தொடரை இணைந்து நடத்தும் நாடுகள்: அவுஸ்திரேலியா, நியூசிலாந்து 
  • ஐசிசியின் தரவரிசை மூலம் தகுதிபெற்ற அணிகள்: வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து 

இந்த 12 அணிகளும் 2028 போட்டிக்கான முக்கிய அணிவரிசையை உருவாக்குகின்றன. அதேபோல் பல முக்கிய நாடுகள் தங்களது பங்கேற்பை முன்கூட்டியே உறுதிப்படுத்தியுள்ளன. 

20 அணிகள் மொத்தமாக பங்கேற்கும் 2028 டி20 தொடரில் 12 அணிகளை ஐசிசி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், மீதமுள்ள 8 அணிகள் 2026 மற்றும் 2027க்கு இடையில் ஐசிசி பிராந்தியங்களில் (ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா-பசிபிக்) நடைபெறும் பிராந்திய தகுதிப் போட்டிகள் மூலம் தீர்மானிக்கப்படும்.  

ICC T20 World Cup 2028

Afghanistan, T20 World Cup 2026