கலாட்டா நாய்க்கு ஐசிசி விருது: விநோத அறிவிப்பின் பின்னணி என்ன?

icc dog monthaward
By Irumporai Sep 15, 2021 05:55 AM GMT
Report

ஐசிசி என்கிற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனை விருதோடு மாதத்தின் சிறந்த நாய் என்ற ஒரு விருதையும் வழங்கி இருப்பது  பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .

ஆகஸ்ட் மாத சிறந்த வீரராக ஜோ ரூட் தேர்வு செய்யப்பட மகளிர் கிரிக்கெட்டில் அயர்லாந்தின் ஈமியர் ரிச்சர்ட்சன் தேர்வு செய்யப்பட்டார், ஆனால் இவர்களோடு புதிதாக ஒரு ஜீவனும் ஆகஸ்டின் சிறந்த விருதை பெற்றது.

அனைத்து அயர்லாந்து டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் மைதானத்திற்குள் ஓடிவந்த நாய்க்கும் சிறந்த நாய் விருது அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போட்டியின் போது இந்த நாயின் பீல்டிங் முயற்சியை பாராட்டி இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அயர்லாந்து கிரிக்கெட்டில் இந்த நாய்தான் சிறந்த பீல்டர் என்று வர்ணிக்கப்பட்டது. மேலும் பிளேயர் ஆஃப் த மொமண்ட் விருதையும் இந்த நாய் தட்டிச் சென்றது. ஐசிசி இந்த வணக்கத்துக்குரிய நாயின் போட்டோவை தன் அதிகார பூர்வ ட்விட்டர்  பதிவில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளது. இந்த மாதம் விருது கூடுதல் வீரருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று ஐசிசி தற்பெருமையுடன் குறிப்பிட்டுள்ளது.