அஜித் குமாரின் அடுத்த கார் ரேஸ் எப்பொழுது? எப்படி பார்ப்பது?
நடிகர் அஜித்குமார் அடுத்தது கார் பந்தயங்களில் கலந்து கொள்ள உள்ளார்.
அஜித் குமார்
நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவருக்கு நடிப்பை தாண்டி கார் ரேஸ். பைக் ரேஸ், ட்ரோன் தயாரிப்பு என பல விஷயங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர்.
சமீபத்தில் அஜித்குமார் துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொண்டார். இதில் தகுதிச்சுற்றில் 7வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜித்குமாரின் ரேஸிங் அணி, 992 பிரிவு கார் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்து சாதித்துள்ளது.
கார் ரேஸ்
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு நேரில் சென்று ஆதரவளித்தனர். வெற்றிக்கு பின்னர் அஜித்குமார் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது, இந்திய தேசிய கொடியை அசைத்து கொண்டே மைதானத்தில் ஓடியது போன்ற வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரலானது.
இதைத்தொடர்ந்து வரும் மார்ச் 22, 23 தேதிகளில் இத்தாலியின் முகெல்லோவில் நடைபெற உள்ள 24H ஐரோப்பிய தொடர், பின்னர், ஏப்ரலில் பெல்ஜியத்தில் உள்ள ஸ்பா-ஃபிராங்கோர்ஷாம்ப்ஸ், மீண்டும் மே மாதத்தில் இத்தாலியின் மிசானோவில் மிச்சலின் 12H, தொடர்ந்து செப்டம்பர் 27, 28 ஆம் தேதிகளில் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெறும் மிச்சலின் 24H ஆகியவற்றில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித்குமார் கலந்துகொள்ள உள்ள கார் பந்தயங்களின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு உரிமையை IBC Tamil Sports பெற்றுள்ளது.