மேட்டூர் அணையில் 90 ஆண்டுகள் தூர்வாரவில்லை ; தடுமாறும் விவசாயிகள் - கொதித்த பாலகிருஷ்ணன்!
தமிழக ஐக்கிய விவாசியிகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் ஐபிசி தமிழ் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
பாலகிருஷ்ணன்
கோடை காலத்தில் விவசாயிகளின் இன்னல்கள் என்ன? மற்றும் நீர் நிலைகளின் பணிகளுக்கு அரசு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை குறித்து பாலகிருஷ்ணன் விவாதித்துள்ளார். அவர் பேசியதாவது, இந்த கோடை காலத்தில் அரசு அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரியிருக்க வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு அணைகள் உள்ளது, நீர்வளம் சேமிக்க கூடிய தன்மையும் உள்ளது. ஆனால் ஒரு அணையில் கொள்ளளவு அதிகமாக இருந்தாலும் அதில் மண் படிந்து தரை மட்டம் உயர்ந்திருப்பதால் அந்த கொள்ளளவிற்கு தண்ணீர் அணையில் தாங்காது எனவே அரசு அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
பெரும்பாலும் அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்யும் பணியில் முறைகேடு நடப்பாதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளப்பாதிப்பில் பயிர்கள் சேதமடையாமல் இருக்க முறையாக நீர் வழித்தடங்களை பராமரிக்க வேண்டும்.
தடுமாறும் விவசாயிகள்
குறிப்பாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,செங்கல்பேட்டை,திருவள்ளூர் இன்னும் பல மாவட்டங்களில் கிட்ட தட்ட 4000 ஏரிகள் உள்ளது. ஆனால் மழை வெள்ளத்தில் அதிகளவு தண்ணீர் கடலில் சேர்ந்துவிடுகிறது ஏனென்றால் ஏரிகளால் அதை தக்க வைக்கமுடியவில்லை. எனவே மக்களும் அரசும் இணைந்து பணியாற்ற வேண்டும் என குறிப்பிட்டுளளார்.
மேலும் டெல்டா விவசாயிகள் நம்பி இருக்கும் மேட்டூர் அணி தரவுகளின் படி 90 ஆண்டுகளாக முறையாக தூர்வாரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். வண்டல் மண்கள் விவசாயிகளுக்கு ஒரு நல்ல ஆதார சக்தி ஆகும் எனவே அதை அரசு சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்கிழக்கு பருவ மழை பெய்யக்கூடும் எனவே நீர்வழித்தடங்களை பராமரிக்கவும், தூர்வாரவும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரைக்குமான காலகட்டம் மிகவும் உகந்தது என தெரிவித்துள்ளார். விவசாயிகளை காப்பாற்றக்கூடிய ஆயுதம் மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது.
எனவே மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றிணைந்து பணியாற்றினால் மட்டுமே விவசாயிகள் வளரமுடியும். இன்றைய காலகட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் நடக்கிறது. மற்ற கிராமங்களை விடவும் டெல்டா பகுதிகளில் கூடுதல் மின்சாரம் வழங்கவேண்டும் என்ற சிறப்பு ஆணை இருக்கிறது. இருப்பினும் அதை பூர்த்தி செய்யாமல் கிராம புறங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் நடக்கிறது. இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். முழு நேர்காணல் இதோ