12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

government tamilnadu transferred iasofficers
By Irumporai Jun 01, 2021 01:00 PM GMT
Report

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து பல்வேறு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுவருகின்றனர்.


இந்த நிலையில்  தலைமை செயலாளர் இறையன்பு  வெளியிட்டுள்ள  வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தோட்டக்கலைத்துறை இயக்குனராக எஸ்.ஏ.ராமன் ஐ.ஏ. எஸ் நியமனம் கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தர் சேகர் சகாமுரி ஊரக வளர்ச்சித்துறையின் இணை செயலாளராக நியமனம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், அரசு சர்க்கரை நிறுவனத்தின் கூடுதல் ஆணையராக  பதவி வகிக்க உள்ளார்.

சமூக நலத்துறை செயலாளராக இருந்த மதுமதி ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையராக பதவியேற்கவுள்ளார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா, உயர்கல்வித்துறையின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது விநியோக துறையின் ஆணையராக இருந்த சஜன் சிங் சவான், மீன்வளத்துறையின் கூடுதல் ஆணையராக நியமனம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.