21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு!

tamilnadu iasofficer
By Irumporai May 25, 2021 03:21 PM GMT
Report

21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் தீரஜ் குமார் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலராக சுப்ரியா சாகுவும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலராக ஜோதி நிர்மலாசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலராக சந்தீப் சக்சேனா உள்ளார்.

 ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலராக கே.கோபாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர பல்வேறு துறைகளில் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.