தமிழ்நாட்டில் 26 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு

Stalin IAS Officers Transfer
By mohanelango Jun 09, 2021 12:18 PM GMT
Report

தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து நிர்வாகத்தில் பல்வேறு அதிரடியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று புதிதாக மேலும் 26 ஐ.ஏ.ஏஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி ஆணையராக டாக்டர்.கார்த்திகேயன் நியமனம். சேலம் மாநகராட்சி ஆணையராக திரு.கிருஸ்துராஜ் நியமனம்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக க்ராண்டி குமார் பாடி நியமனம். நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்னு சந்திரன் நியமனம். கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சுங்காரா நியமனம்.