‘‘தவறிழைத்தவர்களை திருத்தும் தலைவன் நான்’’ - கமல்ஹாசன் அறிக்கை

mnm kamalhasaan
By Irumporai May 11, 2021 05:06 PM GMT
Report

எந்த சூழ்ச்சியாலும் மக்கள் நீதி மய்யத்தை வீழ்த்த முடியாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

அரசியலை வியாபாரமாக பார்க்காமல் கடமையாக பார்ப்பவர்கள் மட்டுமே இக் கட்சியில் தங்கி செழிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும், கோவை தெற்கு தொகுதியில் 33 சதவிகிதம் வாக்காளர் தம்மை மதித்து வாக்களித்துள்ளார்கள் என்றும், பணம் கொடுத்து வாக்குகள் வாங்காத மக்கள் நீதி மய்யம் 33 விழுக்காடு பெற்றுள்ளதை பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் இன்னும் இரண்டாயிரம் வாக்குகள் வாங்கியிருந்தால் சரித்திரம் சற்றே மாறியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

அதே சமயம், தவறிழைத்தவர்கள் தாமே திருந்துவர்கள் என காத்திருப்பவன் நானல்ல என்றும், தவறிழைத்தவர்களை திருத்தும் கடமையும், உரிமையும் உள்ள தலைவன் நான் என்று கூறியுள்ள கமல்ஹாசன்.

நம்பிக்கை கொள்ளும் நம்மவர் கூட்டம் இருக்கிற வரையில் எந்த சூழ்ச்சியும் நம்மை வீழ்த்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.