எனக்கு துணை ஜனாதிபதியாக விருப்பமா ? இது ஒரு நல்ல காமெடி - நிதிஷ் குமார் கருத்து

BJP India Bihar
By Irumporai Aug 11, 2022 07:30 AM GMT
Report

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்தநிதீஷ் குமார் பதவி வகித்து வந்த நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியது.

நிதிஷ்குமார் முதலமைச்சர்

இதனால் நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அதே சமயம் பீகார் மாநில 8-வது முதலமைச்சராக நேற்று பதவியேற்று கொண்டார்.

பாட்னாவில் ராஜ்பவனில் நிதிஷ் குமாருக்கு ஆளுநர் பகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட கூட்டணியின் அடிப்படையில் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

இது சிறந்த காமெடி

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதலமைச்சர்  நிதீஷ் குமார் : நான் துணை ஜனாதிபதியாக விரும்பினேன் என்று ஒருவர் (சுஷில் மோடி) கூறியுள்ளார். என்ன ஒரு காமெடி.

எனக்கு அதுபோன்ற விருப்பம் எதுவும் கிடையாது. அவர்களுடைய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நாங்கள் எப்படி ஆதரவளித்தோம் என்று அவர்கள் மறந்து விட்டனரா? தேர்தல் முடியட்டும் என நாங்கள் காத்திருந்தோம். அதன்பின்பு எங்களது ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது என கூறினார்.

முன்னதாக பீகார் முன்னாள் துணை முதலமைச்சர்  சுஷில் மோடி தனது ட்விட்டர் பதிவில்  இந்தியாவின் துணை ஜனாதிபதியாக நிதீஷ் குமார் விரும்பினார் என கூறியிருந்தார்.