பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு தாலிபான்கள் வசமா.? ட்விட்டரில் வெளியான பரபரப்பு தகவல்

taliban panjshir amrullah
By Irumporai Sep 04, 2021 07:02 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கனை கைப்பற்றிய தாலிபான்கள் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கையும் கைப்பற்றி விட்டதாக வெளியான தகவலை முன்னாள் துணை அதிபர் மறுத்து  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் தலிபான்களால் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்ற முடியவில்லை.

தலிபான்களுக்கு எதிரான படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதுபஞ்ச்ஷீர்  பள்ளத்தாக்கில்  இந்த நிலையில் தாலிபான்களுக்கு எதிரான எதிர்ப்பு படையினருக்கும், தாலிபான்களுக்குமிடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ராய்ட்டர் செய்தி நிறுவனம் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கும் தலிபான்கள் தங்கள் வசம் சென்று விட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆனால் ராய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்ட இந்த தகவலை ஆப்கனின் முன்னாள் துணை அதிபரான அம்ருல்லா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். மேலும் இது தொடர்பாக தனது  ட்விட்டர் பதிவில் :

தனது இடத்தையும், அதனுடைய கண்ணியத்தையும் காப்பதற்கு ஆப்கனின் முன்னாள் துணை அதிபரான அம்ருல்லா இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது வரை தலிபான்களுக்கு எதிரான மோதல் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் தொடர்வதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், நாங்கள் நெருக்கடியான சூழலில் தான் இருக்கிறோம் என்பதில் சந்தேகம் இல்லை. நாங்கள் தாலிபன்களின் படையெடுப்பை எதிர்கொண்டு வருகிறோம் நாங்கள் சரணடையமாட்டோம், நாங்கள் ஆப்கானிஸ்தானுக்காக நிற்கிறோம் எனவும் கூறினார். தான் ஆப்கானிஸ்தானை விட்டு ஓடிவிட்டதாகக் கூறுவது தவறு என்பதை உறுதிப்படுத்தவே இந்த காணோளியைப் பகிர்கிறேன் எனக் கூறியுள்ளார்.