நான் இட்லி சுட வரவில்லை ஒரு தலைவனா வந்திருக்கிறேன் : ஆவேசமான அண்ணாமலை
நான் பாஜகவின் மேனஜர் இல்லை , தலைவானக வந்துள்ளேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவில் விலகல்
பாஜகவிலிருந்து அண்மையில் முக்கிய நிர்வாகிகள் விலகி, அதிமுகவில் இணைந்தனர். அவர்கள் விலகுவதற்கு அண்ணாமலை தான் காரணம் என்றும் கூறியிருந்தனர். இதற்கு பாஜகவினர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
நான் தலைவன்
பாஜக நிர்வாகிகள் விலகல் குறித்து அண்ணாமலையிடம் கேட்ட போது, தான் தமிழ்நாட்டில் பாஜகவின் மேனேஜராகஇருந்து கொண்டு, சீட்டை தேய்க்கவோ, தோசை இட்லி சுடவோ வரவில்லை, தலைவராக வந்திருக்கிறேன். தலைவராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல, எனது முடிவுகள் இருக்கும். எனக்கு ஒரு சார்பாகவோ, பின்னால் சென்று கை, காலில் விழுவது எல்லாம் தெரியாது

2026 ல் ஆட்சி
கலைஞர் போல, ஜெயலலிதா போல தலைவருக்கான முடிவுகள் எடுக்கும் போது சிலர் கோபத்தில் செல்வது வழக்கம் தான், நானும் அவர்கள் போல் பெரிய ஆள் என்று சொல்லவில்லை, அவர்கள் போல ஒரு தலைவர் தான். கட்சியின் வளர்ச்சிக்கு என்ன முடிவுகள் எடுக்கவேண்டுமோ அதைத்தான் தலைவர் செய்வார், கட்சி 2026 இல் ஆட்சியமைக்க வேண்டுமானால் இன்னும் வேகமெடுத்துதான் செல்வோமே தவிர.
வேகத்தை குறைப்பது கிடையாது.
இதனால் கட்சியிலிருந்து விலகி, என்னை குற்றம் சாட்டினால் நான் அதற்கு வருத்தப்படப்போவதில்லை, தலைவராக கட்சியை வழிநடத்துகிறேன், அவ்வாறு தான் சில முடிவுகள் எடுக்க வேண்டிவரும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.