நான் இந்தியன், தமிழன், முஸ்லிம்!"- யுவன் ஷங்கர் ராஜா சொல்ல வந்தது என்ன?

cinema yuvanshankarraja sociealmedia
By Irumporai Apr 29, 2021 10:51 AM GMT
Report

தனது இசையால் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் இசையமைப்பாலார் யுவன் ஷங்கர் ராஜா.

கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முகநூலில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை பதிவிட்டிருந்தார். அவரது பதிவில்: '

அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.'' என பதிவிட்டிருந்தார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இந்தப் பதிவிற்கு ரசிகர் ஒருவர், ''யுவன் ஷங்கர் ராஜாவாக உங்களை ரசிக்கிறேன். இது, மதத்தைப் பரப்புவதற்கான தளமல்ல. இது தொடர்ந்தால் உங்கள் பக்கத்திலிருந்து விலகிவிடுவேன்'' எனக் கூற, அதற்கு ஒரே வார்த்தையில் Leave என பதில் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மற்றொருவர் உங்கள் பெயரை மாற்றுங்கள் என கூற, “நான் இந்தியன், நான் தமிழன், நான் முஸ்லிம். முஸ்லிம்கள் அரேபியாவில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் வெறுப்பை காட்டுகிறது. மத நம்பிக்கை என்பது வேறு, தேசியம் என்பது வேறு. வெறுப்பை விதைக்காதீர்கள் சகோதரா!'' என்று கூறியுள்ளார்.

நான் இந்தியன், தமிழன், முஸ்லிம்!"- யுவன் ஷங்கர் ராஜா  சொல்ல வந்தது என்ன? | Iam Indian Tamil Muslim Yuvan Shankar Raja

மேலும் யுவன் தனது பதிவில் சூழ்ச்சியாளர்களிடமிருந்து இறைவன் காப்பாற்றுவான்'' என்ற வசனத்தை தற்போதைய சமயத்தில் பதிவிட்டது.

ஆட்சியாளர்களை எதிர்த்து போடப்பட்ட பதிவு என்றும் கூறிவருகின்றனர்.

''உங்களது கருத்து சுதந்திரம். உங்களுக்குப் பிடித்ததை எழுதுகிறீர்கள். உங்கள் உரிமை அது. இதைக யாரும் உரிமை கூறமுடியாது என சிலர் யுவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.