பிரசாத் ஸ்டூடியோ செல்ல மறுக்கும் இளையராஜா- காரணம் என்ன?
இசையமைப்பாளர் இளையராஜாவின் பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 40 ஆண்டுகாலமாக பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா இசையமைத்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து இளையரா காலி செய்ய செய்ய வேண்டுமென அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது பொருட்களை எடுக்க அனுமதி வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் இருவரும் ஒன்றாக பேசி முடிவெடுக்க நீதிமன்றம் அறிவித்த நிலையில் நிபந்தனைகளுடன் இளையராஜாவுக்கு அனுமதி வழங்கப்படும் என பிரசாத் ஸ்டூடியோ கூறியது.
இதனால் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்றதால், இன்று பிரசாத் ஸ்டூடியோவுக்கு இளையராஜா வரவுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இளையராஜாவின் செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரசாத் ஸ்டூடியோவிற்கு இன்று இளையராஜா செல்ல இருந்ததாகவும் ,ஆனால் அவரின் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததால் அவர் மன உளைச்சலில் உள்ளதால், பிரசாத ஸ்டூடியோ இளையராஜா செல்ல மாட்டார் என தெரிவித்துள்ள அவரது செய்தி தொடர்பாளார்.
இளையராஜா தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.