தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெறிவித்த இந்திய விமானப்படை

indian air force thanks tn cm stalin local police officers coonoor villagers helicopter accident
By Swetha Subash Dec 11, 2021 09:56 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளில் உடனடியாக உதவிய முதல்வர் ஸ்டாலின், உள்ளூர் போலீஸார், நீலகிரி மாவட்ட ஆட்சியர், உள்ளூர் மக்களுக்கு இந்திய விமான படை நன்றி தெரிவித்து ட்வீட் அனுப்பியுள்ளது.

கடந்த 9-12-21 அன்று முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 12 விமானப்படை வீரர்கள் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பயணித்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த கேப்டன் வருண் சிங்கை தவிற தளபதி ராவத் உள்பட அனைவரும் உயிரிழந்தனர்.

இவர்களது உடல்கள் விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டு நேற்று இறுதி அஞ்சலி நடைப்பெற்றது.

இந்நிலையில் இந்திய விமான படை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,

“ஹெலிகாப்டர் விமான விபத்தின் போது மீட்பு பணிகளுக்கு மருத்துவ உதவிகளுக்கும் உடனடியாக உதவிய முதல்வர் ஸ்டாலின், நீலகிரி ஆட்சியர் அம்ரித், காட்டேரி கிராம மக்கள், உள்ளூர் போலீஸார் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்”என ட்வீட் செய்துள்ளது.