இது மட்டும் நடந்திருந்தால் என்னை உயிருடன் எரித்திருப்பார்கள்! சோயிப் அக்தரின் பரபரப்பு பேட்டி
2007ம் ஆண்டு நான் செய்த காரியத்தால் சச்சினுக்கு ஏதாவது நடந்திருந்தால் என்னை உயிருடன் எரித்திருப்பார்கள் என அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார் சோயிப் அக்தர்.
2007ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
சுற்றுப்பயணம் முடிந்தவுடன் இரு அணிகளுக்குமான நிகழ்ச்சியொன்று நடைபெற்றது.
அப்போது, விளையாட்டாக சச்சினை சோயிப் அக்தர் தூக்க, கை நழுவி கீழே விழுந்து விட்டாராம்.
ஒருவேளை அவருக்கு ஏதாவது நடந்திருந்தால், எனக்கு இந்தியா விசாவே கிடைத்திருக்காது அல்லது என்னை உயிருடன் எரித்திருக்கலாம் என பரபரப்பாக தெரிவித்துள்ளார் சோயிப் அக்தர்.
பிரபல விளையாட்டு ஊடகத்துக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.