என்னோட தகுதிக்கு சிம்ரனுக்கு ஜோடியாலாம் நடிக்க முடியாது - சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்

Simran
By Petchi Avudaiappan Apr 25, 2022 08:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

என் தகுதிக்கு சிம்ரனுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என கூறியதாக நடிகர் கருணாஸ் பரபரப்பு கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். 

நந்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கருணாஸ் அதன்பிறகு காமெடி, குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதனிடையே சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவ சண்முக நாதன் இயக்கத்தில் வெளியான திண்டுக்கல் சாரதி படத்தின் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமானார். 

என்னோட தகுதிக்கு சிம்ரனுக்கு ஜோடியாலாம் நடிக்க முடியாது - சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர் | I Wont Act With Simran Says Karunas 

2008 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற வடக்குநோக்கியன்ரம் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். தான் அழகாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவர் அழகான மனைவியை திருமணம் செய்து கொண்டால் சந்தேகத்தால் எவ்வாறெல்லாம் நடந்து கொள்வார் என்ற கதையை மையமாகக் கொண்டு வெளியான திண்டுக்கல் சாரதி படத்தில் நடிகர் கருணாஸ் மிக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார். 

இந்த படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக நடிகை கார்த்திகா நடித்த நிலையில் படம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. ஆனால் திண்டுக்கல் சாரதி படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தவர் நடிகை சிம்ரன் தான். படத்தின் கதைப்படி சிம்ரன் மாதிரி மிகப் பெரிய ஹீரோயினை வைத்தால் அவளே ஆட்டோமேட்டிக்கா ஓடிப் போய்விடுவாள் என நினைப்பாங்க அதனால் என்னோட தகுதிக்கு சிம்ரன் வேண்டாமென முடிவு செய்ததாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.