காசாவின் இந்த நிலைமைக்கு இஸ்ரேல் இல்லை.. இவர்கள்தான் காரணம் - நெதன்யாகு
பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பெஞ்சமின் நெதன்யாகு
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி, காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் இயக்கம், இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் ராணுவம் போர் நடத்தி வருகிறது. இதில் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
உணவு மற்றும் தண்ணீர் இன்றி காசா மக்கள் அல்லாடி வருகின்றனர். இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் தங்களது ஆயுதங்களை கீழே போட்டு விட்டால், போரை உடனடியாக நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
முக்கிய அறிவிப்பு
மேலும் ஜெருசலேமில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “காசாவை ஆக்ரமிப்பது தங்களுக்கு நோக்கம் அல்ல. ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து காசாவை விடுவிப்பதே தங்கள் இலக்கு. காசாவில் நிலவும் வறுமைக்கு இஸ்ரேல் காரணமில்லை.
அண்டை நாடுகள் அனுப்பும் உணவுகளை ஹமாஸ் அமைப்பினர் வழிமறித்து தாக்குகின்றனர். காசாவில் உணவு பற்றாக்குறை நீடித்தால், இன்னும் 2 ஆண்டுகளில் அங்கு யாருமே இருக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.