ரிஷப் பண்டை பளாரென்று கன்னத்தில் அறைவேன் - கபில் தேவ் பரபரப்பு பேட்டி

Kapil Dev Rishabh Pant Indian Cricket Team Accident
By Thahir Feb 08, 2023 04:30 PM GMT
Report

ரிஷப் பண்ட் குணமாகி வந்த உடன் அவரை பளாரென்று அறைவேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூறியுள்ளார்.

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் 

இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் டெல்லியில் இருந்து உத்தரகாண்டுக்கு சொகுசு காரில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.  இதையடுத்து அவர் படுகாயங்களுடன் டேராடூனில் உள்ள மருத்துத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லி மருத்துமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதனிடையே நேற்று ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், வெளியே உட்கார்ந்து புதிய காற்றை சுவாசிப்பது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்ற தலைப்புடன் பதிவிட்டிருந்தார்.

பளாரென்று அறைய வேண்டும் 

இந்நிலையில் ரிஷப் பண்டை அறைவேன் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், நான் ரிஷப் பண்டை மிகவும் நேசிக்கிறேன். அவர் நலமடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பண்ட் இல்லாதது இந்திய அணியை சிதைத்து விட்டது.

I will slap Rishabh Pandit Kapil-Dev

அவர் நலம் பெற்றதும் நான் சென்று அவரை கடுமையாக அறைவேன். ஏனென்றால் நீங்கள் உங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் தவறு செய்யும் போது அறையும் உரிமை பெற்றோருக்கு இருப்பதைப் போல குணமடைந்த பிறகு பண்ட்டையும் அறைய விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.