இதை நான் தான் நடத்தி தருவேன்...அடம்பிடிக்கும் நடிகை நயன்தாரா - ஆசை நிறைவேறுமா?

Udhayanidhi Stalin Nayanthara Tamil Cinema Vignesh Shivan
1 மாதம் முன்
105 Shares

நடிகை நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து துவக்க விழாவை நடத்த ஆசைப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

காதல்

நானும் ரவுடி தான் திரைப்படம் மூலம் பழக்கம் ஏற்பட்ட கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடிகை நயன்தாராவும்,விக்னேஷ் சிவனும் காதலித்து வந்தனர்.

இதை நான் தான் நடத்தி தருவேன்...அடம்பிடிக்கும் நடிகை நயன்தாரா - ஆசை நிறைவேறுமா? | I Will Run This Nayanthara Is A Flamboyant Actress

திருமணம்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் சினிமாவில் ஏராளாமான திரைப்படங்களில் நடித்து ஒரு ரசிகர் பட்டாளத்தையை கையில் வைத்திருக்கிறார்.

இவருக்கும் இவரின் காதலருமான விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி திருமணம் நடத்தேறியது.

மகாபலிபுரம் அருகே உள்ள தனியார் ரிச்சார்டில் நடத்தப்பட்ட திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மத்தியில் திருமணம் நடந்தது.

Nayanthara Marriage

இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷாரூக் கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்த கொண்டு திருமணத்தை நடத்தி வைத்ததாக தகவல் வெளியானது.

சிவப்பு நிற ஆடையில் மணக்கோலத்தில் வந்த நயன்தாராவுக்கும்,பொன்னிற ஆடையில் வந்த விக்னேஷ்-க்கும் திருமணம் வெகு சிறப்பாக நடந்தது.

திருமணம் குறித்த புகைப்படங்களை தனது சமூக வளைத்தல பக்கத்தில் பதிவேற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் விக்னேஷ் சிவன். 

சாமி தரிசனம்

திருமணம் முடிந்த கையோடு தனது கணவர் விக்னேஷுடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார் நயன்தாரா.

பின்னர் திருமணத்தில் நடிகை நயன்தாராவின் தாய் உடல் நிலை சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

இதை நான் தான் நடத்தி தருவேன்...அடம்பிடிக்கும் நடிகை நயன்தாரா - ஆசை நிறைவேறுமா? | I Will Run This Nayanthara Is A Flamboyant Actress

இதையடுத்து அவரின் பெற்றோரிடம் ஆசி பெற தன் கணவருடன் கேரளா சென்றார். அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி தனது உறவினர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.

ஹனிமூன்

தன் திருமணம் முடிந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தேனிலவுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர்.

Nayanthara

உற்சாகமாக தேனிலவு கொண்டாடிய அவர்கள் தங்களது புகைப்படங்களை சமூக வளைத்தலங்களில் பதிவிட்டு வந்தனர்.

இதை நான் தான் நடத்தி தருவேன்...அடம்பிடிக்கும் நடிகை நயன்தாரா - ஆசை நிறைவேறுமா? | I Will Run This Nayanthara Is A Flamboyant Actress

அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வந்தது.ஹனிமூன் முடிந்து கடந்த வாரம் இந்தியா திரும்பிய நயன்தாரா தனது இல்லத்திற்கு கூட வராமல் நேரடியாக ஷாருக் கான் நடிக்கும் ஜவான திரைப்படத்தில் நடிப்பதற்காக மும்பை பட பிடிப்பு தளத்திற்கு சென்றதாக தகவல்கள் வெளியானது.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு நடிகை நயன்தாரா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விண்ணப்பித்த நயன்தாரா நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

தனது கணவர் விக்னேஷ் சிவனை வைத்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு அரசின் ஒப்பந்தத்திற்கு நயன்தாரா விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசை நிறைவேறுமா? 

நயன்தாரா திருமணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதய நிதி ஸ்டாலினுக்கு அழைப்பு வழங்கியிருந்தார்.

விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் பங்கேற்றனர்.

நயன்தாராவுக்கு உதயநிதி ஸ்டாலினுடன் நல்ல நட்பு உள்ளதால் துவக்க விழாவை நடத்த நயன்தாராவின் நிறுவனத்திற்கு ஒபந்தம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து நயன்தாராவின் ஆசை நிறைவேறும் என்றே கூறப்படுகிறது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.