சிம்புவின் திருமணத்திற்காக பெண் பார்க்க மாட்டேன் - டி.ராஜேந்திரர் பரபரப்பு பேச்சு
சிம்புவின் திருமணத்திற்காக பெண் பார்க்க மாட்டேன் என அவருடைய அப்பா டி.ராஜேந்திரர் தெரிவித்துள்ளார்.
டி.ஆர்.வாரம்
விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் சீசன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு வாரமும் முன்னாள் சினிமா பிரபலங்களை நினைவுபடுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை மகாபா ஆனந்த், மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்த வாரம் டி.ஆர் வாரம் என்றும் அதில் போட்டியாளர்கள் டி.ஆர்.இசையமைத்த பாடல்களை பாடி அசத்தினர். இந்த வாரம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக டி.ஆர்.ராஜேந்திரன் கலந்து கொண்டார்.
கடவுளே நீயே பார்த்து கொள்
அப்போது பேசிய அவர், என்னை பார்த்து எல்லோரும் கேட்கிறார்கள் உங்க பையனை பிடிக்குமா? உங்களுக்கு உங்க பையனை பிடிக்குமா? என்றும்,
ஆயிரம் கோடிக்கு அதிபதி உள்ளிட்ட எத்தனையோ பெண்கள் நான் சிம்புவை தான் கட்டிப்பேன் என்ற அத்தனை பெண்களையும் பார்த்துவிட்டேன். இதனால் என்னுடைய நட்பு சில முறிந்துவிட்டது.
ஒரு நாள் கூட நானும் என் மனைவியும், பையனுக்கு பிடிக்காமல் நாங்க போய் இந்த பொண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னால் மீற முடியாது. ஆனால் நான் சொல்லவே இல்லை.
அதனால் தான் அந்த மேட்டரை கடவுளே நீ பார்த்துக்கோ...சிவனே நீ பார்த்துக்கோ...என் பையன் (சிம்பு) கல்யாணத்தை பற்றி பேசுவதையே விட்டுவிட்டேன்.