எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணியின் 45-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதற்கு மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்த விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மக்களவைத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஈடுபட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நன்றி.
பிரதமர் மோடி 6 முறை அல்ல ஆயிரம் முறை தமிழகத்துக்கு வந்தாலும் மக்களவை தேர்தலில் வெற்றிபெற முடியாது என்று கூறினேன். அதேபோல தமிழக மக்கள் மக்களவை தேர்தலில் நிரூபித்தனர்.
மறக்க மாட்டேன்
இதற்கு முக்கிய பங்காற்றிய இளைஞரணி நிர்வாகிகள், செயலாளர்களுக்கு எனது நன்றி. இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் மிகவும் முக்கியம். எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக தான் இருப்போம்.
நான் துணை முதல்வராவேன் என்று வரும் தகவல்கள் வதந்தி. பத்திரிக்கைகளில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன். இளைஞரணி செயலாளர் பதவி எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது ” என்று தெரிவித்துள்ளார்.