அங்கே போகமாட்டேன் அதற்கு என் தலையை வெட்டிக்கொள்வேன் : கொந்தளித்த ராகுல் காந்தி

Rahul Gandhi
By Irumporai Jan 18, 2023 04:32 AM GMT
Report

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைய் யாத்திரை எனும் பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ராகுல் நடைபயணம் 

அந்த வகையில் ராகுல்காந்தி தற்போது பஞ்சாப்பில் நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் ராகுல் பேசிய போது, அவரிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனும், பாஜக எம்.பி.யுமான வருண்காந்தி குறித்து கேட்டனர்.

என் தலையை வெட்டிக் கொள்வேன்

அதற்கு பதிலளித்து ராகுல் காந்திவருண் காந்தி பாஜகவில் உள்ளார். அவர் எனது இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு வந்தால்அவருக்கு பிரச்சினையாகி விடும். அவர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை ஏற்றுள்ளதால் அவருக்கு ஒத்துவராது. இதற்கிடையில் அவரை நேரில் பார்த்தால் கட்டி அணைத்துக்கொள்வேன்.

அங்கே போகமாட்டேன் அதற்கு என் தலையை வெட்டிக்கொள்வேன் : கொந்தளித்த ராகுல் காந்தி | I Will Not Cut Off My Head Rahul Gandh

இருப்பினும் அவரது சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. நான் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்கு போகமாட்டேன். அதற்கு முன்னதாக நான் என் தலையை வெட்டிக் கொள்வேன் எனக் கூறியுள்ளார்.