பொருத்தமான பெண் வரும் போது திருமணம் செய்து கொள்வேன் - ராகுல் காந்தி திட்டவட்டம்
தனக்கு பொருத்தமான பெண் வரும் போது திருமணம் செய்து கொள்வேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பொருத்தமான பெண் வேண்டும்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 52 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
திருமணம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் அதற்கு ராகுல் காந்தி விளையாட்டாக பதில் அளித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது ராகுல் காந்தி பேட்டி ஒன்றில் பெண் நெறியாளர் உங்களுக்கு எப்போது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கூலாக பதில் அளித்த ராகுல் காந்தி பொருத்தமான பெண் வந்தால் நான் திருமணம் செய்து கொள்வேன்.
அவர் அன்பான, புத்திசாலியான பெண்ணாக இருக்க வேண்டும். மற்றபடி எந்த எதிர்பார்ப்பும் இல்லை என அவர் புன்னகையுடன் தெரிவித்தார்.
Rahul Gandhi ji's Chit-chat on marriage with Kamiya Jani of curly tales. pic.twitter.com/IGABLIerbu
— Nitin Agarwal (@nitinagarwalINC) January 22, 2023