Tuesday, May 13, 2025

சூரியவம்சம் படத்தில் கலெக்டர் ஆக்கியது போல, ராதிகாவை எம்.பி ஆக்குவேன் - சரத்குமார் உறுதி!

Sarathkumar Raadhika Tamil nadu BJP Virudhunagar
By Jiyath a year ago
Report

காமராஜர் பிறந்த மண்ணில் என் மனைவி போட்டியிடுவது பெருமை என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ராதிகா  சரத்குமார்

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

சூரியவம்சம் படத்தில் கலெக்டர் ஆக்கியது போல, ராதிகாவை எம்.பி ஆக்குவேன் - சரத்குமார் உறுதி! | I Will Make Radhika An Mp Says Sarathkumar

இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இதனிடையே விருதுநகரில் பாஜக சார்பில் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

மக்களவை தேர்தல் - தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

மக்களவை தேர்தல் - தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

எம்.பி ஆக்குவேன்

இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், "நான் போட்டியிட்டாலும் ஒன்றுதான், ராதிகா போட்டியிட்டாலும் ஒன்றுதான்.

சூரியவம்சம் படத்தில் கலெக்டர் ஆக்கியது போல, ராதிகாவை எம்.பி ஆக்குவேன் - சரத்குமார் உறுதி! | I Will Make Radhika An Mp Says Sarathkumar

சூரியவம்சம் படத்தில் கலெக்டர் ஆக்கியது போல எனது மனைவி ராதிகாவை எம்.பி ஆக்குவேன். காமராஜர் பிறந்த மண்ணில் என் மனைவி போட்டியிடுவது பெருமை, மோடி 3வது முறையாக பிரதமர் ஆகவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.