இந்த உறுதியை அளித்தால் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வேன்- சோனம் வாங்சுக்

Delhi
By Yashini Jul 23, 2026 04:41 AM GMT
Report

சலோ சன்சத் பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மீது எந்தவித சட்டரீதியான அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படாது என மத்திய அரசு உறுதியளித்தால், தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் கூறியதாவது.., 

மருத்துவமனையில் தன்னை சந்தித்து, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டதற்கு இருவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த உறுதியை அளித்தால் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வேன்- சோனம் வாங்சுக் | I Will End The Hunger Strike Sonam Wangchuk

நியாயமான மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய கல்வி முறையை கோரியதுதான் மாணவர்களின் ஒரே குற்றம் என்று அவர் குறிப்பிட்டள்ளார்.

மேலும், இதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஜனநாயக நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

மத்திய அரசு இந்த உத்தரவாதத்தை அளிக்காவிட்டால், தனது உண்ணாவிரதத்தை காலவரையின்றி தொடர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.